Translate

சனி, 1 செப்டம்பர், 2012

செங் கற்றாழை கற்பம் - red aloe vera - kayakarpam




செங் கற்றாழை கற்பம் - red aloe vera - kayakarpam

கொள்ளவே சிவப்பான கத்தாழைச் சோறும் 
கொண்டு வர மண்டலந்தா னந்தி சந்தி 
விள்ளவே தேகமது கஸ்தூரி வாசம் வீசும் 
வியர்வைதான் தேகத்தில் கசியாதப்பா 
துள்ளவே நரைதிரைக ளெல்லா மாறும் 
சோம்பல் கொட்டாவி நித்திரையுமில்லை 
கள்ளவே நாகமது உடம்பி லூறும்
கண்களும் செவ்வலரிப் பூப்போலாமே 
                                                    நந்தீசர் - ஞானம் 


சித்தர்கள் குறிப்பிடும் காய கற்ப மூலிகை,தாவர வகைகளில் இன்றைய கால கட்டத்தில் எளிதாக கிடைக்கும் வகைகளில் ஒன்றுதான் கற்றாழை ஆகும் இதனைப் பொதுவாக சித்தர்கள் 'குமரி' எனக் குறிப்பிடுகின்றனர் .உடலினை என்றும் இளமையாக வைக்கும் தன்மை இதற்குண்டு என்ப தனை சித்தர்கள் தங்கள் மெய்ஞானத்தால் கண்டறிந்துள்ளனர்.


பொதுவாக கற்றாழையில் உடலிற்குத் தேவையான வைட்டமின் சத்துக் கள் ஏராளமாக உண்டு.இது உடலில் சேரும் நஞ்சுகளை வெளியேற்றி உடலின் செல்களை உயிர்ப்புடன் காக்கின்றது. எனவே இதனை முறைப் படி உண்டோமானால் முதுமை தோன்றாமல் தேகத்தை என்றும் இளமை யுடன் (காய கற்பம்) காத்துக் கொள்ளலாம்.


சிவப்புக் கற்றாழையை மேலே உள்ள தோலை சீவி நீக்கி விட்டு அதன் சதைப் பகுதியை மட்டும் எடுத்து தண்ணீரில் அலசி விடவும்.பிறகு அந்த தண்ணீரை ஊற்றி விட்டு புது தண்ணீரை விட்டு அலசவும்.இதே போல் ஏழு முறை தண்ணீர் விட்டு கழுவி விட்டு எடுத்து திரிகடுகு தூளில் பிரட்டி  மென்று உண்ணவும்.


இதேபோல் காலை - மாலை உண்ணவும்.தொடர்ந்து ஒரு மண்டலம் - 48-நாள் உண்ணவும்.இதுவே காயகற்பம் ஆகும்.


இதன் பலன்கள் :
உடலில் கஸ்தூரி வாசனை வீசும்,.உடலில் வியர்வை வெளியேறாது, தலை முடி கருக்கும், பார்வைத்திறன் அதிகரிக்கும்.(நரை,திரை)மாறும். உடலில் முழுதும் பிராணன் நிரம்பும்.சோம்பல்,கொட்டாவி,தூக்கம் வராது.மனம் விழிப்பு நிலையில் நின்று "குண்டலினி"யோகம் சித்திக் கும்.   

நன்றி !
ரிசி...
சித்தர் களஞ்சியம் - குழு (face book) 

  


   
  


7 கருத்துகள்:

  1. அய்யா வணக்கம் ,தங்களது தளம் சித்தர்களின்
    சிறந்த கருத்துகளையும்,காயகல்ப மூலிகைகளையும்
    தெளிவுபடுத்துகிறது.
    இந்த மாதிரி முழு சிகப்பான குமரி,கிடைப்பது மிக
    அரிதாக உள்ளது.எங்கு கிடைக்கும் அய்யா ?
    என்றும் அன்புடன் சின்னா

    பதிலளிநீக்கு
  2. அய்யா வணக்கம் ,சித்தர்களின் காபுகடும் முறையில்
    உள்ள கன்னி நூல் எப்படி செய்து எடுப்பது என்று விளக்கமாக
    தெரிவிக்கவும் ,ssetex@gmail.com
    cell 9789720046.

    என்றும் அன்புடன் சின்னா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சின்னா அவர்களே !

      சித்தர்கள் கூறிய அரிய காயகற்ப மூலிகைகளில்
      ஒன்றுதான் செங்குமரி எனப்படும் சிவப்புக் கற்றாழை
      பல்லாயிரம் வருடங்களுக்கு முன் சித்தர்கள் குறிப்பிடும்
      இவ்வகை மூலிகைகள் இன்றும் உள்ளன என்பதற்கான
      ஆதாரங்களுக்காகத் தான் படங்களையும் வெளியிட்டுள்
      ளோம்.

      காயகற்பத்திற்கு உதவும் கருப்பு மற்றும் சிவப்பு நிற
      மூலிகைகளை கண்ணால் காண்பதற்கே மிகவும் பாக்கியம்
      செய்திருக்க வேண்டும்.
      தேடுங்கள் பிராப்தம் இருந்தால் கிட்டும்.

      நன்றி.!

      ரிசி...

      நீக்கு
  3. Could you please direct the site location & availability this red aloe vara to my mail ID:rm5868@gmail.com
    regards
    R.Mani B.E
    Chennai

    பதிலளிநீக்கு
  4. Red aloe Vera is actually available or not if yes where it is available. And can you update the photos of actual red also Vera

    பதிலளிநீக்கு
  5. In photo you are showing for red aloe Vera is not actual red aleo Vera

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு