சர்ப்பம் தம்பனம் -பாம்பை
கையில் பிடிக்க
ஆமாப்பா யின்னுமொரு மூலி கேளு
அப்பனே சீந்திற்குக் காப்புக்
கட்டி
தாமப்பா மூலமென்ற மந்திரங் கேளு
சாதகமாய்ச் சொல்லிவிட்டேன்
சார்ந்து பாரு
காமப்பா வம் வம் வங் வங்
சிவாவென்று
கருதிவிடு வுருநூறு காட்டிப்
போடு
ஊமப்பா பொங்கலிட்டு பெலிதானீந்து
உத்தமனே வேர் பிடுங்கி மஞ்சநூல்
சுத்தே
சுத்தியே வளையமிட்டுக் கையிற்
போடே
துஷ்டனென்ற சர்ப்பமெல்லாஞ்
சுருங்கிப் போகும்
தட்சிணா மூர்த்தி திருமந்திரம்...
பாம்பென்றால் படையும் நடுங்கும்
என்பர்.அப்படிப்பட்ட பாம்பும் நம்மைக் கண்டால் நடுங்கச் செய்யும் மூலிகைகள்
ஏராளம் உண்டு.அதில் ஒன்று தான் "சீந்தில் கொடி"என்பதாகும்.
இம் மூலிகைக்கு கன்னி நூல்
காப்புக் கட்டி,சாபநிவர்த்தி செய்து மூல மந்திரம் "ஓம் வம் வம் வங் வங் சிவா"என்று
108-முறை செபித்து பொங்கல் படையல் வைத்து எலுமிச்சை பலி கொடுத்து ஆணி வேர் அறாமல்
வேர் பறித்து அதனை மஞ்சள் நூலால் சுற்றி வளையம் போல் செய்து கையில் காப்பு போட்டுக்
கொண்டு சீரும் பாம்பின் முன் கையை நீட்டினால் அடங்கி ஒடுங்கும்.
நன்றி !
ரிசி...
<siddharkalanjiyam.blogspot.in>
சித்தர்களஞ்சியம் குழு - facebook
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக