கொடிவேலி
நத்தைச் சூரி
நீர் தம்பனம் -நீர் மேல் நடக்கும் சித்து
சூரியனை அரவுதொடும் செவ்வாய் வாரம்
தீண்டயிலே கொடுவேலி நத்தைச் சூரி
வீரியமாய் காப்புக் கட்டி பிடுங்கி வந்து
வித்துவேசணி நமச்சிவாய வென்று
காரியமாய்க் குளிசமிட்டுச் சூரி வேரைக்
கட்டியே வாரி தனில் நடந்து பாரே
வீரியமும் வீழாது சலம் தம்பிக்கும்
விள்ளாதே கொடிவேலி விளம்புவேனே
மச்சமுனி -800,
சூரிய கிரகணம்,செவ்வாய்க் கிழமை
வரும் நாளன்று கிரகணம்
பிடிக்கும் போது "கொடிவேலி"
"நத்தைச் சூரி" இரண்டு மூலிகை
களை காப்புக் கட்டி,"ஓம்
வித்து வேசணி நமச்சிவாய" என்று
உரு செபித்து இரண்டு மூலிகைகளின்
வேர்களையும் சேர்த்துக்
கட்டி ஒரு செப்பு தாயத்தினில்
அடைத்து இடுப்பில் கட்டிக் கொண்டு ஏரி,குளம்,கடல் போன்றவைகளில் உள்ள தண்ணீரின் மேல்
நடக்கலாம் என்றும் அந்த நீர் உறைந்து ஸ்தம்பித்து விடும் என்று மச்ச முனி சித்தர்
தனது நூலில் குறிப்பிடுகின்றார் .
நன்றி !
ரிசி ...
அன்புள்ளம் கொண்ட இமயகிரிசித்தர் அவர்களுக்கு என் உள்ளம்கனிந்த வணக்கங்கள்,
பதிலளிநீக்குஐயா நத்தைச் சூரி (காயகற்பம்)செய்முறை விளக்கமும்..
மற்றும் இம்மருந்தினை உண்ணக்கூடிய முறைகளையும் பற்றி அறிந்துகொள்ள பதிவுகளை எதிர்நோக்கி ஆர்வமுடன் காத்திருக்கிறேன்
நன்றி!
Gowtham Gp
கௌதம் அவர்களே,நதைசூரி விதை எளிதில் கிடைக்கும்
பதிலளிநீக்குஅதை பொடியாக்கி,கருப்பட்டி கலந்து நீரில் கொதிக்கவைத்து
குடிக்கலாம்
அன்பன் சின்னா