புதையல் காணும் மை செய்முறை விபரம்
சித்தர்கள் நூல்களில் பல்வேறு
மை விபரங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவைகளில் ஸ்ரீ
வசிய மை,தெய்வ வசிய மை,ராஜவசிய
மை,கண் கட்டு மை,ஜாலக்காள்
மை,களவு காணும் மை,மறைவு
மை,புதையல் காணும் மை,போன்ற ஏராளமான மை செய்முறைகளை குறிப்பிடுகின்றனர்.
இவைகளை அஞ்சனம் (மை) என
பெயர் குறிப்பிட்டுள்ளனர்.
இவைகளை நடைமுறையில் செய்து
வெற்றி காண தக்கதொரு குருவின் துணை நிச்சயம் வேண்டும்.கருவும் குருவும் வேண்டும் என்பது
உண்மை.
மேற்கண்ட பலவித மை முறைகளில்
பாதாள அஞ்சனம் பற்றிய சித்தர் அகத்திய பெருமானின் பாடல்.
தேனான பாதாள வஞ்சனந்தான்
தேற்றமுள்ள சாதிக்காய் தண்ணீர்
மீட்டான்
மானான தும்பையுடன் கையான்
றானும்
மகத்தான கருந்தும்பை மூலியாமே
மூலியாஞ் சரக்கெல்லாங் கருக்கியப்பா
முசியாம லாமணக்கு எண்ணை தன்னில்
சாலியாய்த் தானரைப்பாய்
சாமம் பத்து
சலியாமல் கஸ்தூரி பச்சை
பூரம்
வேலியாங் கொடிவேலித் தைலமப்பா
விட்டுமே குழப்பியதை மத்தித்தேதான்
பாலியர் மாந்தருக்கு மையை
யப்பா
பாதாள வஞ்சனமும் போடுவாயே
போடுவாய் அஞ்சனத்தை திலதங்
கொண்டு
பொன்னவனே லலாடமதில் வெண்ணீர்
பூண்டு
ஆடுவாய் திருக்கூத்தை மையின்
வேக
மப்பனே வுலகமதி லென்ன சொல்வார்
நீடுபுகழ் வஞ்சனமாம் நிதியுந்தோன்றும்
நீடாழி நிதிகலேல்லாங் கண்ணிர்றோன்றும்
மாடுகண்டு மிருகமெல்லா மெதுவானாலும்
மகாதேவா கண்ணிற்கு தோன்றும்
பாரே
ஜாதிக்காய்,தண்ணீர் மீட்டான்,தும்பை,கையான் தகரை,கருந்தும்பை,
இவைகளை கருக்கி ஆமணக்கு எண்ணை விட்டு பத்து சாமம் அரைத்து இதனுடன் கஸ்தூரி,பச்சை கற்பூரம்,கொடுவேலி
தைலம் விட்டு குழப்பி மத்தித்து பனிரண்டு வயதுக்குட் பட்ட சிறுவர்களின் நெற்றியில்
திலதம் போட்டுப் பார்க்க பூமியில் உள்ள புதையல் எல்லாம் கண்ணில் காட்டும் .
என்கின்றார் அகத்தியர் பெருமான்
இவற்றிற்கான மந்திரம் விபரம் அடுத்த பதிவில் வெளியிடுகின்றோம் .
நன்றி!
ரிசி...
காணாமல் போனவர் பற்றி அறிய ஏதேனும் வழி (மை) உள்ளதா?
பதிலளிநீக்கு