Translate

புதன், 22 ஆகஸ்ட், 2012

மஞ்சள் கரிசலாங்கண்ணி - வெள்ளை கரிசலாங்கண்ணி - மருத்துவ பயன்கள்

மஞ்சள் கரிசலாங்கண்ணி 



வெள்ளை கரிசலாங்கண்ணி 


கரிசலாங்கண்ணி மருத்துவ பயன்கள் 

மஞ்சள் கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:

திருவுண்டாம் ஞானத்தெளிவுண்டாம் மேலை
யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் குருவுண்டாம் 
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக் கையாந்தகரைத் 
தன்னாகத் தின்றாகத் தான்.

இதனை சமைத்து உண்டு வந்தால் இறைவன் அருளும்,அறிவின் தெளிவும், உடலுக்கு பொன் போன்ற நிறத்தையும்,கொடுக்கும்.குன்மக்கட்டியை நீக்கும்.

வெள்ளை கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:

குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை 
யுறர் பாண்டு பன்னோ யொழிய நிரர் சொன்ன
மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்துக்
கையாந்தகரை யொத்தக்கால்
                                                   (தேரன் வெண்பா)

இதனால் குரலுறுப்பு நோய்,காமாலை,குட்டம்,சோகை வீக்கம்,பாண்டு,பல் நோய் ஆகியவை போகும்.உடலில் போற்சாயலும்,யாளிக்குள்ள பலமும் உண்டாகும்.

கரிசலாங்கண்ணி யின் வேறு பெயர்கள்: கரிசாலை,கரிப்பான்,கைகேசி,தேக ராஜம்,பிருங்கராஜம்,பொற்றிலைப் பாவை,கையாந்தகரை,போன்றவைகள்.

இம்மூலிகையில் தங்கச்சத்தும்,இரும்புச்சத்தும்,அபரிமிதமாக இருக்கின்றன மணிச்சத்தும்,சுண்ணாம்புச்சத்தும்,வைட்டமின் -A ,வைட்டமின் -C , முதலிய சத்துக்களும்,தாது உப்புக்களும்,மாவுச்சத்தும்,புரதம் போன்றவைகளும் இருக் கின்றன.

மஞ்சள் கரிசலாங்கண்ணி யில் மஞ்சள் பூ பூக்கும்,இது ருசியாகவும் காரமின்றி இருக்கும்.இதனையே உணவுக்காக பயன்படுத்துகின்றனர்.

வெள்ளை பூ உள்ள வெள்ளை கரிசலாங்கண்ணியின் இலை சற்று தடிப்பான கரும்பச்சை நிறமுடைய இலையாக காரமாக இருக்கும்.இதை நெய் விட்டு வதக்கி விட்டால் காரம் போய்விடும் மணமும் ருசியும் கொடுக்கும்.

உணவாகப் பயன்படுத்தும் முறை :

மஞ்சள் கரிசலாங்கண்ணியின் இலைகளை ஆய்ந்து எடுத்து பருப்புடன் சேர்த்து வேக வைத்து சாம்பாராகவும்,கூட்டுக் கறியாகவும்,பொரியலாகவும், கடையலாகவும்,செய்து உணவோடு சேர்த்து உண்ணலாம்.புளி சேர்க்கக் கூடாது,மிளக்காய்க்குப் பதில் மிளகு சேர்க்க வேண்டும்.இதனையே சூப்பாகவும் செய்து உண்ணலாம்.
வெள்ளை கரிசலாங்கண்ணியை நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு வதக்கிய பிறகு மேற்கண்டபடி உணவுகளாகத் தயாரிக்க வேண்டும்.
மஞ்சள் கரிசாலையில் தங்கச்சத்தும், வெள்ளை கரிசாலையில் இரும்புச் சத்தும்  நிறைய இருக்கின்றது.

கரிசாலையின் மருத்துவ குணங்கள் :

கரிசாலையை பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர தலை முடி உதிர்வது நிற்கும்.முடி கறுத்து  வளரும்.கண் நோய் நீங்கும்.சப்த தாதுக்களை வலுப்படுத்தும்.உடலை வலுப்படுத்தும்.
இதனை தினமும் உபயோகித்து வருபவர்களுக்கு இரத்தத்தில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்பட்டு இரத்தம் சுத்தமாகும்.மலச்சிக்கல் நீங்கும்.ஆயுள் விருத்தியாகும்.

கரிசலாங்கண்ணி இலையையும்,கருவேப்பிலை இலையையும் காய வைத்து இடித்து தூள் செய்து இரண்டும் சம அளவு கலந்து கொண்டு காலை மாலை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து உண்டு வர இரத்த மூலம்,இரத்த சோகை,பெண்களின் மாதவிடாய் சுழற்ச்சி சரியாகும்.

இதன் இலைச்சாறு ஒரு பங்கும் நல்லெண்ணெய் ஒரு பங்கும் சேர்த்து பதமாக  காய்ச்சி எடுத்து வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து முழுகி வந்தால் அனைத்து பித்த ரோகங்களும் நீங்கும்.நரை முடி கருக்கும்.

மஞ்சள் காமாலைக்கு :
இதன் இலையை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்து 25-மிலி வீதம் காலை -மாலை அருந்தி வர கல்லீரல் சுத்தம் அடையும் ,காமாலை நோய் குணமாகும்.
இரத்தத்தில் உள்ள பித்த நீர் வெளியேறி இரத்த சிவப்பணுக்கள் பெருகும்.

வள்ளலார் கரிசாலை குடிநீர் (காபி):

மஞ்சள் கரிசாலை பொடி : ஒரு பங்கு 
தூதுவளைப் பொடி : கால் பங்கு 
மொசுமொசுக்கைப் பொடி :கால் பங்கு
சீரகம் : கால் பங்கு 
இவை அனைத்தையும் பொடித்துக் கலந்து வைத்துக்கொண்டு இரண்டு தம்ளர் நீரில் இரண்டு டீஸ்பூன் அளவு பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து ஒரு தம்ளர் அளவு காய்ச்சி சுண்ட வைத்து வடிகட்டி இதனுடன் பனை வெல்லம் சிறிது சேர்த்து கலையில் தினமும் அருந்திவர மேற்கண்ட பலன்கள் கிட்டும். 

நன்றி !
அரவின் தீபன்...                      

             
          

2 கருத்துகள்: